ரயில் நிலைய அதிபர்கள் நேற்று நள்ளிரவு முதல் ஆரம்பித்துள்ள அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக மலையக பகுதிகளுக்கு புகையிரதத்தில் பயணிக்கும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
ஹட்டன் ரயில் நிலையத்தில் தங்கியிருந்த பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக ஹட்டன் பஸ் நிலையத்தில் பல தனியார் மற்றும் அரச பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இன்று காலை நானுஓயாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கவிருந்த பயணிகள் புகையிரதமும் சரக்கு புகையிரதமும் நானுஓயா புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பதுளைக்கு புகையிரத சேவைகள் இடம்பெறவில்லை. இதனால் மலையக பகுதிகளுக்கான புகையிரத சேவை முற்றாக பாதிப்புக்கு உள்ளத்தியுள்ளது.