ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சீன விஜயத்தின் பின்னர் புதிய மாகாண ஆளுநர்கள் நியமனம் மேற்கொள்ளப்படும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
9 மாகாண ஆளுநர்களில் 4 பேரை தமது பதவிகளை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி செயலகத்தினால் அறிவிக்கப்பட்ட போதிலும் அவர்களில் எவரும் இதுவரை இராஜினாமா செய்யவில்லை என சில தினங்களுக்கு முன்னர் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, மாகாண ஆளுநர்களை பதவி நீக்கம் செய்வதற்கு ஜனாதிபதிக்கு அரசியலமைப்பு அதிகாரம் இல்லை என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா தெரிவித்திருந்தார்.
முன்னாள் பிரதம நீதியரசரின் அறிக்கையை ஆய்வு செய்ய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதியின் சீன விஜயத்தின் பின்னர் அந்தக் குழுவின் அறிக்கை பெறப்பட்டு அதன் பின்னர் ஆளுநர்கள் நியமனம் மேற்கொள்ளப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சீன விஜயம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.