தேசிய பொலிஸ் ஆணைக்குழு அதன் தலைவர் முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ தலைமையில் இன்று (11) கூடவுள்ளது.
இதன்போது சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய சமர்ப்பித்த கோரிக்கை பரிசீலிக்கப்பட உள்ளதுடன், தனக்கு வழங்கப்பட்ட இடமாற்றம் நியாயமற்றது என சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த முறைப்பாட்டினை பொலிஸ் ஆணைக்குழு பரிசீலித்து இன்று விசாரணைகளை மேற்கொள்ளும் என பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் சந்திரா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். தற்போதுள்ள பொலிஸ் ஆணைக்குழுவின் கூட்டத்தின் இறுதி நாள் இன்று எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.