கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் DP Education ஏற்பாடு செய்திருந்த, பொது இடங்களில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு இடம்பெறும் பாலியல் வன்முறைகளுக்கு எதிரான “வன்முறைக்கு எதிரான உலகளாவிய சைகைகள்” முத்திரை வெளியீட்டு விழாவில் சிறப்புரை ஆற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பொருளாதார நெருக்கடியின் போது குடும்பத்தைப் பாதுகாப்பதற்கு பெண்கள் எதிர்நோக்கிய சவால்களை தான் நன்கு அறிவதாகவும், பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்ட முதல் சந்தர்ப்பத்திலேயே பெண்களை வலுவூட்டும் வகையில் இரண்டு சட்டமூலங்களை அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்ததாகவும் சுட்டிக்காட்டினார்.
மேலும், இது தொடர்பான சட்டமூலங்களை எதிர்வரும் ஜூன் மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.