மேல்மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களையும் நாளை (12) வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஷிலானி பெரேரா உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
இருவரையும் இன்று அடையாள அணிவகுப்பில் ஆஜர்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் முகமூடியுடன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மற்றுமொரு சந்தேக நபர் சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்