ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதி மேயர் சந்திக அபேரத்னவுடன் தலங்கமவில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த சமூக ஊடக செயற்பாட்டாளர் பியத் நிகேஷலாவை எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேரில் சென்று சந்தித்துள்ளார்.
சமூக ஊடக செயல்பாட்டாளர்களான நிகேஷலா மற்றும் அபேரத்ன ஆகிய இருவரும் முறையே கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் முல்லேரியா வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பியத் நிகேஷலாவை சஜித் பிரேமதாச இன்று வைத்தியசாலைக்கு சென்று பார்வையிட்டார்.
”ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசியல்வாதிகள் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் நடந்து கொள்ள அனுமதிக்கப்படுது வருத்தமளிப்பதாக” சஜித் பிரேமதாச இதன்போது ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
N.S