காணாமல்போன முனவ்வரா ஜின்னா காட்டுக்குள் சடலமாக மீட்பு!

0
258

பணிக்கு செல்லும் போது காணாமல் போயிருந்த முனவ்வரா ஜின்னா சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த 07ஆம் திகதி காலை 08:15 மணியளவில் கெலிஓயவிற்கு வேலைக்குச் செல்வதற்காக வீட்டிலிருந்து சென்ற முனவ்வரா ஜின்னா கடந்த 6 நாட்களாக காணாமல்போயிருந்தார். உறவினர்கள் , பொலிஸார் என பலரும் இவரை தேடி வந்த நிலையில் காட்டுக்குள் கொலை செய்ய்யபட்டு புதைக்கபட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த யுவதி, கெலிஓயா நகரிலுள்ள பாமசியில் பணியாற்றிவந்துள்ளார். பணியாற்றும் இடத்துக்குச் செல்வதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை (07) வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இவர் எல்பிட்டியவில் நடந்துசென்றுகொண்டிருந்த போது காட்டுக்குள் இழுத்து செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் போதைக்கு அடிமையான இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரை விசாரித்ததில்,

அவர் அப்பகுதியில் ஆடு வளர்த்து வருபவர் என தெரியவந்துள்ளது. ஆடுகளுக்கு புல் வெட்டுவதற்காக சென்ற போது, குறித்த பெண்ணை மானபங்கம் செய்ய முயன்றுள்ளார். அவர் மறுத்ததால், சந்தேக நபர் பெண்ணை காட்டுப் பகுதிக்கு இழுத்துச் சென்றுள்ளார். அங்கேயே கொல்லப்பட்டதாகவும், கொலையின் பின்னர் உடல் அதே இடத்தில் புதைக்கப்பட்டதாக பொலிஸாருடன் கூறியுள்ளார்.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here