ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் விஜேதாச ராஜபக்சவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக நியமித்தமை சட்டபூர்வமானது அல்ல என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (12) அழைப்பு விடுத்திருந்தமை சட்டவிரோதமான செயற்குழு கூட்டம் எனவும் கட்சியின் பதில் தவிசாளர் நிமால் சிறிபாலடி சில்வா என்றும் அவர் கூறினார்.
மைத்திரி அழைத்த கூட்டம் சட்டவிரோதமானது. சட்ட மட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடுகளில் எந்த மாற்றமும் இல்லை. தடை செய்யப்பட்ட குழு சட்டவிரோத கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. அந்த சட்டவிரோத சந்திப்பில் தடை செய்யப்பட்டவர்கள் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளனர். மைத்திரிபால சிறிசேன சட்டரீதியாக பதவி விலக வேண்டும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அங்கம் வகிக்காத ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஒருவர் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இது பண்டாரநாயக்காவை அன்று கொன்றதை விட பாரிய செயலாகும். இன்னும் சொல்லப்போனால் கட்சி அழிந்து விட்டது. விஜேதாச ராஜபக்ச முதலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து வெளியேற வேண்டும். அதன் பின்னர் தான் மொட்டு கட்சி உறுப்பினர் இல்லை என்று அந்தக் கட்சி எங்களிடம் கூற வேண்டும். அப்போதுதான் விஜேதாச ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமைக்கு விண்ணப்பிக்க முடியும். உறுப்பினராக இல்லாத ஒருவர் கட்சியின் தலைவராக இருக்க முடியாது.
கொழும்பில் நேற்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே துமிந்த திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.