தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் பொருளாதாரம் நல்ல நிலைக்கு வருவதற்கு சில காலம் எடுக்கும் என கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரும் பொருளாதார குழு உறுப்பினருமான சுனில் ஹந்துன்நெத்தி கூறுகிறார்.
“நாங்கள் ஒரு அரசாங்கத்தை எடுத்து ஒரே இரவில் பொருளாதாரத்தை மாற்ற முடியாது. இதுபோன்ற பொய்யான வாக்குறுதியை நாம் அளிக்க வேண்டிய அவசியமில்லை. தோழர் அநுரவிடம் இப்போது நான் ஜனாதிபதி, அதனால்தான் நான் ஆறு அல்லது ஏழு மாதங்கள் ரணில் போல் இருப்பேன், சிறிது காலம் கோட்டாபாயவைப் போல் செய்துவிட்டு, அநுர திஸாநாயக்கவைப் போல் செய்வேன் என்று சொல்ல முடியுமா?
பொருளாதாரத்தை மாற்றுவதற்கு நியாயமான கால அவகாசம் தேவைப்படும். ஆனால் 24 மணி நேரமும் அரசியல் மாறப்போவதில்லை” அண்மையில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தி பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சுனில் ஹந்துன்நெத்தி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கமொன்றில் சுனில் ஹந்துன்நெத்தி நிதியமைச்சராக நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்படுகிறது.