ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தலைவராக விஜயதாச ராஜபக்சவை நியமித்தமைக்கு எதிராக தடையுத்தரவு பிறப்பிக்கவும், எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதை தடுக்கவும் கடுவெல மாவட்ட நீதிபதி துலானி விக்ரமசூரிய இன்று (13) உத்தரவிட்டுள்ளார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் விஜயதாச ராஜபக்ஷ, பதில் செயலாளர் கீர்த்தி உடவத்த மற்றும் பொலிட்பீரோ உறுப்பினர்கள் ஆகியோருக்கு தடையின்றி இந்த வழக்கைத் தவிர வேறு எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என அனைத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை உத்தரவை கோரி ஜனாதிபதி சட்டத்தரணி இக்ரம் மொஹமட் உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழு இந்த வழக்கை தாக்கல் செய்திருந்ததுடன், இது தொடர்பான மேலதிக விசாரணை எதிர்வரும் மே மாதம் 27ஆம் திகதி நடைபெறவுள்ளது.