மத்திய மலைநாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக மரக்கறிகளின் மொத்த மற்றும் சில்லறை விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளதாக மரக்கறி விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதன்படி தக்காளி ஒரு கிலோ ரூ.400, பச்சை மிளகாய் ரூ.250, பீன்ஸ் ரூ.480, உருளைக்கிழங்கு ரூ.200, முருங்கை ரூ.560, கெரட் ரூ.250, முட்டைகோஸ் ரூ.200, போஞ்சி ரூ.250, வெண்டைக்காய் ரூ.280 என்ற அடிப்படையில் கிலோவொன்றின் சில்லறை விலை காணப்படுகிறது.
எதிர்வரும் நாட்களில் மோசமான வானிலை நிலவும் பட்சத்தில் மரக்கறிகளின் விலை மேலும் அதிகரிக்கக்கூடுமென மரக்கறி விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
N.S