அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரப் பணியகத்தின் உதவி இராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லு, (Donald Lu) இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது தொடர்பாக நேற்று (13) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது, ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் பொருளாதார சீர்திருத்த திட்டங்களுக்கும் அவர் பாராட்டுத் தெரிவித்தார்.