சரித் அபேசிங்க மீது SJB எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை

Date:

இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரணை தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்கவின் கட்சி உறுப்பினர் பதவியை இடைநிறுத்த ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுத்துள்ளது. 

அத்துடன், அவர் இதுவரை வகித்த அனைத்து பதவிகளையும் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தவும் கட்சி தீர்மானித்துள்ளது. 

இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, 2023 ஆம் ஆண்டளவில் அவர் கட்சியின் உறுப்பினராகவோ அல்லது அமைப்பாளராகவோ செயற்படவில்லை என்றும், சரித் அபேசிங்க அக்காலப்பகுதியில் ஐக்கிய மக்கள் சக்தியின் எந்தவொரு பதவியையும் வகிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். 

எவ்வாறாயினும், ஊழல் அல்லது சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராகச் சட்டம் அமுல்படுத்தப்படுவதையோ அல்லது நீதிமன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுவதையோ ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் எதிர்ப்பதில்லை என்பதை பொதுச் செயலாளர் தனது அறிக்கையின் ஊடாக மேலும் வலியுறுத்தியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கைது கதையிலேயே மூழ்கியுள்ள ஜனாதிபதிக்கு வாழ்க்கைச் செலவு நெருக்கடி புரியவில்லை

கைது, விசாரணை மற்றும் தீர்ப்புகள் குறித்து ஜனாதிபதி தொடர்ந்து கருத்து தெரிவிப்பதற்குப்...

ரகித, சரித் இருவரும் ஜூலை 3ம் திகதி வரை விளக்கமறியலில்

பாதாள உலக தலைவன் "ஹரக் கடாவிற்கு" வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக, அவரது...

கொழும்பில் இரு முக்கிய புள்ளிகள் கைது

முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனும் சட்டத்தரணியுமான ரகித ராஜபக்ஷ மற்றும்...

வெனிசுவேலா நிலநடுக்கம் – பலர் பலி

வெனிசுவேலாவின் தலைநகரான கராகஸில் சில வினாடிகள் இடைவெளியில் இரண்டு பெரிய நிலநடுக்கங்கள்...