சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுடன் இணைந்து அரசியல் செய்யவுள்ளதாக சமகி ஜன பலவேகவின் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
“இந்த அமைச்சர் ஹரின் வேலை செய்வதில் வல்லவர். இப்போது இங்குள்ள பத்திரிக்கையாளர்களுக்கும் வடிவேல் சுரேஷ் எதற்கு என்ற கேள்வி எழும். நான் அந்த கட்சியில் இருக்கிறேன், இந்த கட்சியில் இல்லை, ஹரின் கட்சியில் இருக்கிறேன். எந்த பிரச்சனையும் இல்லை, நாங்கள் ஒன்றாக முன்னேறுவோம். நான் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுடன் இணைந்து வாக்கு கேட்பேன். சின்னம், கட்சி பற்றி எனக்கு கவலை இல்லை. அவருடன் இந்தப் பயணம் செல்கிறேன். அவர் எங்கள் தொழிற்சங்கத்தின் தலைவர், நான் பொதுச் செயலாளர். எனவே தலைவரும் பொதுச் செயலாளரும் ஒரே பக்கம் இருக்க வேண்டும். அதை நாங்களும் புரிந்து கொண்டோம். இது நேரத்தையும் மிச்சப்படுத்துகிறது மற்றும் நாங்கள் இருவரும் ஒன்றாக செல்கிறோம். எதிர்காலத்தில் பதுளை மாவட்டத்தில் தோட்டத்தையும் கிராமத்தையும் ஒருங்கிணைக்க உள்ளோம். அதுவே எங்களின் முன்னோக்கிய வழி.
சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தலைமையில் பதுளையில் நேற்று (14) இடம்பெற்ற இலவச காணி உறுதி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே வடிவேல் சுரேஷ் இவ்வாறு தெரிவித்தார்.
வடிவேல் சுரேஷ் அண்மைய நாட்களில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருடன் தனித்தனியாக கலந்துரையாடல்களை நடாத்தியிருந்ததுடன் கட்சி மாற்றம் குறித்து சூசகமாகத் தெரிவித்திருந்தார். இருந்தாலும் அவர் நாளை வேறு கதை சொல்வாரா என்று ஊகிக்க முடியாது.