போருக்கோ, பாதுகாப்பு நோக்கங்களுக்கோ ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா பயன்படுத்த முடியாது!

0
59

அம்பாந்தோட்டை துறைமுகத்தை எந்தவொரு யுத்தத்திற்கோ அல்லது பாதுகாப்பு நோக்கங்களுக்கோ பயன்படுத்த முடியாது. வர்த்தகத்திற்கு மாத்திரம் பயன்படுத்த முடியாது என்பது சீனாவுடனான இலங்கையின் உடன்படிக்கையில் மிகவும் தெளிவாக உள்ளதாக துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷில் நடைபெற்றுவரும் ஆறாவது சர்வதேச இந்தியப் பெருங்கடல் மாநாட்டில் கலந்துகொடுள்ள அமைச்சர் அங்கு ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

“நாங்கள் இந்தியாவுடன் சிறந்த உறவைக் கொண்டுள்ளோம். இந்தியா பல்வேறு வழிகளில் எமக்கு உதவி செய்து வருகிறது. இந்தியாவில் இருந்து எமது விமான நிலையங்களுக்கு விமானங்களை இயக்கப்படுகிறது. பாண்டிசேரியில் இருந்து கப்பல் சேவைகளைத் தொடங்கியுள்ளோம். இதன் மூலம் இந்தியாவுடனான இணைப்பை அதிகரித்துள்ளோம்.

இந்தியாவின் பாதுகாப்பு குறித்து நாங்கள் கவனமாக இருக்கிறோம். இந்தியாவுடன் மிகவும் நட்பு ரீதியான உறவு உள்ளது. திருகோணமலை துறைமுகத்தின் அபிவிருத்தி குறித்தும் இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். அதேபோன்று கொழும்பு துறைமுகத்தில் அதானியின் முதலீடு குறித்து இலங்கை கவனம் செலுத்தியுள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள போதிலும் அந்த துறைமுகம் போர் அல்லது பாதுகாப்பு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படாமல் இருப்பதை சீனா உறுதி செய்துள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை பொறுப்பேற்குமாறு இந்தியாவிடம் ஆரம்பத்தில் கூறியிருந்தோம். பின்னர் அமெரிக்காவிடம் கூறியிருந்தோம். ஆனால், இருநாடுகளும் அதனை பொறுப்பேற்காத நிலையில் சீனா அதனை பொறுப்பேற்றுள்ளது. என்றாலும் சீனா இதனை வர்த்தகத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளோம்” என்றார்.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here