தினேஷ் ஷாப்டரின் சடலத்தை தோண்டி எடுக்க கோரிக்கை

0
174

ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரின் சடலத்தை தோண்டி எடுக்க அனுமதிக்குமாறு ஐந்து பேர் கொண்ட விசேட வைத்திய சபை கொழும்பு நீதவான் நீதிமன்றத்திடம் கோரியுள்ளது.

அவரது மரணத்திற்கான காரணத்தை கண்டறியும் வகையில், அவரது சடலத்தை தோண்டி எடுத்து பரிசோதனை செய்ய அனுமதிக்குமாறு மருத்துவ சபை நேற்று (18) எழுத்து மூலம் நீதிமன்றில் கோரியுள்ளது.

இதன்படி, ஐவரடங்கிய விசேட வைத்திய சபையின் இந்தக் கோரிக்கை தொடர்பில், குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்க வழக்கை அழைப்பதற்கும் திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here