பாஸ்போர்ட் மாபியா கும்பலுக்கு அமைச்சர் டிரான் வைத்த ஆப்பு!

0
149

பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு திணைக்கள அலுவலகத்தை சுற்றி தங்கியிருந்து கடவுச்சீட்டை விரைவாக வழங்குவதாக கூறி மக்களிடம் பணம் வசூலிக்கச் சென்ற 09 தரகர்கள் சிறிலங்கா பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் இன்று (19) காலை கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் உத்தரவுக்கமைய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் இது இடம்பெற்றுள்ளது.

சில தரகர்கள் வரிசையில் நிற்காமல் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை தயாரித்து, வரிசையில் நிற்காமல் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை தயாரித்து, வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை பரிசீலிப்பதற்காக 25,000 ரூபாவை பெற்றுக்கொள்வதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதுடன், இது தொடர்பில் ஊடகங்களும் சுட்டிக்காட்டின.

இதனால், இது குறித்து உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு புலனாய்வுப் பிரிவினருக்கு நேற்று (18) பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி இன்று காலை வரை அவ்வாறானவர்களிடம் பணம் பெற்ற 09 தரகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும், இவ்வாறான மோசடியாளர்களுடன் இணைந்து செயற்படும் ஏனைய அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்படும் எனவும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here