இந்தோனேசிய ஜனாதிபதியை சந்தித்தார் ரணில்

0
218

இந்தோனேசிய தலைநகர் பாலியில் நடைபெற்று வரும் பத்தாவது உலக நீர் மாநாட்டுக்கு இணையாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவிற்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இடம்பெற்றது.

இந்தோனேசிய ஜனாதிபதி இதன்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சிநேகபூர்வமாக வரவேற்றார்.

இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான சிநேகபூர்வ உரையாடலின் பின்னர், இருதரப்பு கலந்துரையாடல்களும் ஆரம்பிக்கப்பட்டன.

இலங்கைக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையிலான வரலாற்று உறவுகளை மேலும் பலப்படுத்த இரு நாட்டு தலைவர்களும் உறுதி எடுத்துக்கொண்டதோடு, பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இரு நாட்டுத் தலைவர்களும் பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்துக் கவனம் செலுத்தியதோடு, உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here