ஜனாதிபதி நியமித்த செயலாளர் பதவி விலகல்

0
273

பொது பாதுகாப்பு அமைச்சுக்கு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட செயலாளரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ், விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் டிரன் அலஸ்வினால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையிலேயே செயலாளர் இன்று தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளார்.

சமன் திஸாநாயக்க, பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர், பதில் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் கஜபா படைப்பிரிவில் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியாவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here