மின் கட்டண திருத்தத்தின் விலை பட்டியலை வெளியீடு!

Date:

எதிர்வரும் ஜூன் மாதம் முதல் மேற்கொள்ளப்படவுள்ள மின் கட்டண திருத்தத்தின் விலை பட்டியலை அமைச்சர் காஞ்சன விஜேசேகர  இன்று பாராளுமன்றத்தில் சமர்பித்தார்.

இதன்படி, 0-30 வரையான அலகுக்கான விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, புதிய அலகின் விலை 25 ஆக புதிய திருத்தத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.

இதேவேளை, நிலையான கட்டணத்தை 400 ரூபாவிலிருந்து 250 ரூபாவாக குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதன்படி, மின்சாரக் கட்டணத்தில் முதலாம் பிரிவினருக்கு குறைந்த பட்சம் 23% சலுகை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், இந்தச் சலுகையைப் பெற்றுக்கொள்ளும் குடும்பங்கள் 1,744,000 எனத் தெரிவித்தார்.

மேலும், 31-60 அலகுகளுக்கு 9% மற்றும் 0-60 அலகுகளுக்கு 7% மின் கட்டணம் குறைக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

0-30 அலகுகள் வரை பயன்படுத்தும் 15,646 மத வழிபாட்டுத் தலங்களுக்கான மின் கட்டணம் ஜூலை மாதத்தில் 23% ஆக குறைக்கப்படும் என்றும், 31-60 அலகுகள் வரை பயன்படுத்தும் 10,692 மத வழிபாட்டுத் தலங்களுக்கு 7% மின் கட்டணத்தைக் குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

உணவக பிரிவினருக்கு 29% முதல் 40% வரை மின்சார கட்டணத்தை குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சம்பத் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு

முன்னாள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பிரதேச சபை வேட்பாளர் சம்பத்...

சூதாட்ட வரி அதிகரிப்பு

1988 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க சீட்டாட்டம் மற்றும் சூதாட்ட...

கெஹெலிய ரம்புக்வெல்ல பிணையில் விடுதலை

கடந்த அரசாங்கத்தின் போது தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை வாங்கியதன் மூலம்...

காட்டுத் தீயை கட்டுப்படுத்த இராணுவம் களத்தில்

பலாங்கொடை நன்பேரியல் வனப்பகுதியில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த இராணுவமும் வரவழைக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்தும் சில...