யாழிலிருந்து தீவுகளுக்கான படகுச் சேவைகள் இன்றும் நிறுத்தம்!

Date:

யாழ்ப்பாணத்தில் இருந்து கடல் கடந்து பயணிக்கும் தீவுப் பகுதிகளுக்கான படகுச் சேவைகள் இன்றும் (25) இடம்பெறமாட்டாது என யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தின்  காலநிலை அறிக்கையின் பிரகாரம் நேற்று 24 ஆம் திகதி கடல் அதிக கொந்தளிப்பாகக் காணப்பட்டதன் காரணமாக பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி தீவுப் பகுதிகளுக்கான படகுச் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டன.

இதன் பிரகாரம் நெடுந்தீவு, எழுவைதீவு மற்றும் அனலைதீவுக்கான படகுச் சேவைகளே நேற்று முதல்  நிறுத்தப்பட்டன. இந்நிலையில், அதிக காற்றுடன் கூடிய காலநிலை தொடர்வதன் காரணமாக இன்றும் மேற்படி 3 தீவுகளுக்குமான படகுச் சேவைகள் இடம்பெறமாட்டாது எனவும், நயினாதீவுக்கான படகுச் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெறும் எனவும் யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவினரால்  அறிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நாளை ஜனாதிபதி அனுரவை சந்திக்கத் தயாராகும் மனோ அணி

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை, தமிழ் முற்போக்கு கூட்டணி தூதுக்குழு நாளை...

புதிய வரி பில் திட்டம் தள்ளிவய்ப்பு

2026 ஏப்ரல் 01 முதல் அமலுக்கு வரவிருந்த மதிப்பு கூட்டு வரி...

மேலும் ஒரு கடல் வழி போதை பொருள் கடத்தல் – அறுவர் கைது

இலங்கை கடற்படையினர் தென்மேற்கு திசையில் உள்ள ஆழ்கடலில் மேற்கொண்ட சிறப்பு...

ஊழல் வழக்கில் சிக்கிய அமைச்சர் பதவி நீக்கப்படுவாரா?

2015 ஆம் ஆண்டு இலங்கை உர நிறுவனத்தின் கொள்முதல் நடவடிக்கையில் ரூ....