நிபந்தனைகளுக்கு உட்பட்டு அரசாங்கத்தில் பங்குகொள்ள சமகி ஜன பலவேகய (SJB) செயற்குழு நேற்று தீர்மானித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன நேற்று தெரிவித்தார்.
நிறைவேற்று ஜனாதிபதி முறையை மாற்றுவதற்கு ஜனாதிபதி இணங்கினால், அரசாங்கத்தில் பங்குகொள்ள நாங்கள் தயார் என்ற தீர்மானத்தை செயற்குழு உறுதிப்படுத்தியது என எம்.பி. எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார்.
“எரிவாயு, எரிபொருள், மருந்துகள் மற்றும் உணவு போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு உதவுமாறு நட்பு நாடுகளுக்கு நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம். லஞ்சம் மற்றும் ஊழலை குறைக்கவும், திருடப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கும் சட்டத்தை கொண்டு வருவோம்,” என்றார்.
மேலும், கட்சியின் தீர்மானங்களை மீறி அமைச்சுக்களை பொறுப்பேற்ற ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரிடம் விசாரணை நடத்த செயற்குழு தீர்மானித்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.