அதிகளவிலான மக்கள் பலம் சஜித் பிரேமதாசவுக்கா?

Date:

இலங்கையில் அதிகளவிலான மக்கள் பலம் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு காணப்படுவதாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

அதில் மாகாண மட்டத்தில் மொட்டுக் கட்சி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் பெரும்பாலான உறுப்பினர்கள் உள்ளடங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை குறைவடைந்த நிலையில் ஒரே ஒரு தீர்வு தேசிய மக்கள் சக்தி மாத்திரமே என்ற எண்ணத்தில் இருந்த பலரும் தற்போது ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஆரம்பத்தில் தேசிய மக்கள் சக்திக்கு படையெடுத்து வந்த கூட்டம் தற்போது மீண்டும் மொட்டுக்கட்சிக்கும் பெரும்பாலானவர்கள் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இணைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, தேசிய மக்கள் சக்தி கடந்த தேர்தலில் பெற்றுக்கொண்ட 4 இலட்சம் வாக்குகளை 50 வீதமாக அதிகரித்துக்கொள்ள குறைந்தது 70 இலட்சம் வாக்குகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.

அவ்வாறான ஒரு வாக்கு வீதத்தை அவர்களால் பெற்றுக்கொள்வது சாத்தியமற்றது என்பதால், தேசிய மக்கள் சக்திக்கு ஒரு போதும் அரசாங்க அதிகாரத்தை பெற்றுக் கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழ், முஸ்லிம் வாக்குகள் வெகு விரைவாக ஐக்கிய மக்கள் சக்தியிடம் திரும்பி வருவதாகவும் அதனடிப்படையில் அனைத்து வாக்குகள் மூலமும் ஐக்கிய மக்கள் சக்திக்கு அதிகளவு வாக்கு வீதத்தை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்தார்.

பொது மக்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து முன் நிற்கும் காரணத்தினால் கிராமப்புற மக்கள் சஜித் பிரேமதாச மீது அசையாத நம்பிக்கை வைத்துள்ளதாக திஸ்ஸ அத்தநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், ஐக்கிய மக்கள் சக்தி அல்லாதவர்களை கட்சியில் இணைத்துக்கொள்வதற்காக எதிர்வரும் மாதம் 7ஆம் திகதி தொடக்கம் புதிய பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார்.

அதன் மூலம் மேலும் 20 இலட்சம் வாக்குகளை ஐக்கிய மக்கள் சக்தியில் இணைத்துக் கொள்ளவுள்ளதாக தேசிய அமைப்பாளர் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

செம்மணி – சர்வதேச விசாரணைக்கு புலம்பெயர் தமிழர்கள் பிரித்தானிய அரசாங்கத்துக்கு அழுத்தம்!

செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச விசாரணையே ஒரே தீர்வு. பாதிக்கப்பட்ட தரப்பாக...

செம்மணியில் இதுவரையில் 187 எலும்புக்கூட்டு தொகுதி மீட்பு

செம்மணி மனித புதைகுழியில் ஒரு பெரிய எலும்பு கூட்டின் நெஞ்சு பகுதியுடன்,...

அமரர். சௌமியமூர்த்தி தொண்டமானின் 112 ஆவது ஜனன தினம் இன்று!

அமரர். சௌமியமூர்த்தி தொண்டமானின் 112 ஆவது ஜனன தினம் இன்று (30)...

இன்றைய வானிலை நிலவரம்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை...