சுமார் ஒன்றரை மாதங்களாக மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவதில் காலதாமதம் ஏற்பட்டதால், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரிடமிருந்து அரசாங்கத்திற்கு ஏற்பட்ட நட்டத்தை மீளப்பெற அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனவரி முதலாம் திகதி முதல் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க மின்சார சபை முன்மொழிந்திருந்த நிலையில், ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க அதனை பெப்ரவரி மாதத்தின் நடுப்பகுதிக்கு ஒத்திவைத்ததோடு, மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதில் ஏற்பட்ட தாமதத்தினால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. நஷ்டம் ஒன்றரை மாதங்களுக்கு 3,200 கோடி ரூபாவாகும். அதை ஜனக்க ரத்நாயக்க ஈடுசெய்ய வேண்டும் என மின்சாரம் மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
இதேவேளை, ஜனக்க ரத்நாயக்கவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களம் சட்டவிரோத சொத்து சேகரிப்பு விசாரணையை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.