ராஜகுமாரி விவகாரம் – வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இடமாற்றம்!

Date:

திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் நெத்திகுமாரி வீட்டில் தங்க மோதிரம் நகை திருடியதாக கூறப்படும் வீட்டில் பணிப்பெண்ணாக இருந்த பெண் பொலிஸ் காவலில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உடனடியாக பொலிஸ் களப் படைத் தலைமையகத்தில் சாதாரண கடமைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தெரிவித்துள்ளார்.

பிரதான பொலிஸ் பரிசோதகர் சிந்தக அனுராதா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக ஒரு சப்-இன்ஸ்பெக்டர், இரண்டு பொலீஸ் சார்ஜென்ட்கள் மற்றும் ஒரு பொலீஸ் கான்ஸ்டபிள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதோடு, மற்றொரு கான்ஸ்டபிள் மற்றும் இரண்டு பெண் பொலீஸ் கான்ஸ்டபிள்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பதுளை மடுல்சீமவில் வசித்த ஆர்.ராஜகுமாரி மூன்று பிள்ளைகளின் தாயார் கடந்த பதினொன்றாம் திகதி உயிரிழந்தார்.

வெலிக்கடை பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதியின் இடமாற்றம் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் பரிந்துரையின் பிரகாரம் பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்கு உட்பட்டது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நாம் ராஜபக்சகளை போன்று சுனாமி திருடர்கள் அல்ல – பிமல் ரத்நாயக்க

எந்த அரசாங்கத்திலும் சில விடயங்கள் நடைமுறையில் இருந்து கொண்டிருந்தாலும், அவை அனைத்தும்...

அரசியல் களத்தில் மீண்டும் பணிகளை தொடங்கிய ரணில்

இதய அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்து ஓய்வில் இருந்த முன்னாள் ஜனாதிபதியும்...

பாடகர் சங்கீத்சன் விடுதலை வலியுறுத்தி போராட்டம்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பாடகர் சங்கீத்சன் கணேஸ்குமாரை...

காரணமின்றி கைது செய்ய வேண்டாம்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், தகுந்த காரணம் இன்றி தன்னைக்...