கடமை தவறிய முன்னாள் ஜனாதிபதிக்கு 14 வருடகால சிறை!

0
77

கடமைகளிலிருந்து விலகிய குற்றத்திற்காக எல் சல்வடோரின் முன்னாள் ஜனாதிபதி Mauricio Funes மற்றும் அவரது நீதி அமைச்சர் ஆகியோருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளி குழுக்களுடன் தொடர்புகளை பேணியமை மற்றும் கடமைகளிலிருந்து விலகியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் இவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக எல் சல்வடோர் சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைவாக முன்னாள் ஜனாதிபதி Mauricio Funes-விற்கு 14 ஆண்டுகளும் முன்னாள் நீதி அமைச்சர் David Munguia-விற்கு 18 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

2009 ஆம் ஆண்டிலிருந்து 2014 ஆம் ஆண்டு வரை ஜனாதிபதி பதவியில் இருந்த Funes, தேர்தல் இலாபத்திற்காக திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவின் உறுப்பினர்களுடன் தொடர்புகளை பேணியுள்ளமை தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதி தற்போது நிகரகுவாவில் வசித்து வருவதுடன் 2019 ஆம் ஆண்டு அவருக்கு அந்நாட்டு பிரஜாவுரிமையும் வழங்கப்பட்டது.

நிகரகுவா பிரஜையொருவர் வௌிநாடொன்றில் குற்றவாளியாக காணப்பட்டாலும் அவரை அந்நாட்டிடம் ஒப்படைக்காமலிருப்பதற்கான சட்டதிட்டங்களே நிகரகுவாவில் உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here