“நானே சிறுமியை கொலை செய்தேன்” – குற்றத்தை ஒப்புக்கொண்ட சந்தேகநபர்

Date:

பண்டாரகமை – அட்டுலுகம சிறுமி பாத்திமா ஆயிஷா கொலை தொடர்பில் கைதான 29 வயதான நபர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

தாமே குறித்த சிறுமியை கொலை செய்ததாக தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

கைதான 29 வயதான 3 பிள்ளைகளின் தந்தையே இந்த கொலையை செய்துள்ளமை தற்போது தெரியவந்துள்ளது.சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கையின்படி சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

களுத்துறை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் பாணந்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு இணைந்து மேற்கொண்ட தேடுதலின் போது சந்தேநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 27ஆம் திகதி காணாமல் போயிருந்த சிறுமி பாத்திமா ஆயிஷா, மறுநாள் தமது வீட்டுக்கு அருகில் உள்ள சதுப்பு நிலம் ஒன்றில் வைத்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பாடகர் கைது சம்பவம் குறித்து பொலிஸார் விளக்கம்

இலங்கையில் தடைசெய்யப்பட்ட LTTE அமைப்பை மகிமைப்படுத்தும் பாடல்கள் தொடர்பாக ஒருவர் கைது...

இன்றும் மழையுடன் கூடிய வானிலை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

முச்சக்கர வண்டி மீது மரம் முறிந்து வீழ்ந்து மூவர் பலி

நாவலப்பிட்டி, மாப்பாகந்தை பகுதியிலிருந்து நாவலப்பிட்டி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி...

முதியோர் இல்ல தீ விபத்தில் இதுவரை 11 சடலங்கள் மீட்பு

ஹொரணை அங்குருவத்தோட்ட, பட்டகொடவில் தீப்பிடித்த முதியோர் இல்லத்தில் இருந்து 11 பேரின் உடல்கள்...