கோட்டாவால் பசிலுக்கு சிக்கல்

Date:

அரசியலமைப்பின் 21வது திருத்தத்தை தனது பூரண சம்மதத்துடன் கொண்டு வந்துள்ளதாக அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச ஆளும் கட்சியின் நாடாளுமன்ற குழுவிடம் தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சிக் குழுக் கூட்டத்தில் அரச தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கும் இடையில் சந்திப்பு பரபரப்பாய் நகரும் அரசியல் களம்பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச மற்றும் எதிர்க்கட்சியில் இருந்து வந்து அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் கலந்துக் கொண்டிருந்தனர்.

உத்தேச அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்வதற்காகவே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

பரபரப்பாய் நகரும் அரசியல் களம்இதன்போது, நீதி மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ச 21வது திருத்தம் தொடர்பில் முதலில் விளக்கமளித்திருந்தார்.

இரட்டைக் குடியுரிமையை நீக்குதல் உள்ளிட்ட 21வது திருத்தச் சட்டத்தின் உள்ளடக்கங்கள் குறித்து அமைச்சர் விரிவாக எடுத்துரைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சரித் அபேசிங்க மீது SJB எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை

இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய...

கைது கதையிலேயே மூழ்கியுள்ள ஜனாதிபதிக்கு வாழ்க்கைச் செலவு நெருக்கடி புரியவில்லை

கைது, விசாரணை மற்றும் தீர்ப்புகள் குறித்து ஜனாதிபதி தொடர்ந்து கருத்து தெரிவிப்பதற்குப்...

ரகித, சரித் இருவரும் ஜூலை 3ம் திகதி வரை விளக்கமறியலில்

பாதாள உலக தலைவன் "ஹரக் கடாவிற்கு" வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக, அவரது...

கொழும்பில் இரு முக்கிய புள்ளிகள் கைது

முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனும் சட்டத்தரணியுமான ரகித ராஜபக்ஷ மற்றும்...