அரசாங்கத்தின் உத்தேச ஒலிபரப்பு அதிகார சபைச் சட்டம் மோசமானதாகுமென நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
வெகுஜன ஊடகங்களை முன்னேற்றுவதற்கான ஒரு முயற்சியென கூறப்படும் இந்தச் சட்டம், உண்மையில் அரசாங்கம் தனது சொந்த நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப ஊடகங்களை ஒடுக்குவதற்கு கையாளும் ஒரு கருவியாக பயன்படுத்த முற்படுகிறது.
முன்மொழியப்பட்ட ஒலிபரப்பு அதிகாரசபை சட்டமூலத்தில் அரசாங்கத்தின் சித்தாந்தத்துடன் ஒத்துப்போகாத ஊடகங்கள் மீது அழுத்தங்களை பிரயோகிக்கவும் கட்டுப்படுத்தவும் வழிவகைகள் உள்ளன. இத்தகைய நடவடிக்கைகள், ஜனநாயக சமூகத்தின் கொள்கைகளுடன் அடிப்படையில் பொருந்தாதவை என்றும் அவர் கூறியுள்ளார்.
N.S