யாழ், பொது நூலகம் 44வது ஆண்டு நினைவு

0
112

யாழ்ப்பாணம் பொதுசன நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டமையின் 44 ஆவது ஆண்டு நினைவுநாள் இன்று (01) அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 9.00 மணியளவில் பொதுசன நூலகத்தில் இந்த நினைவேந்தல் இடம்பெற்றது.

நினைவேந்தலின்போது யாழ்ப்பாண பொதுசன நூலகத்தை உருவாக்குவதற்கு காரணகர்த்தாவாக விளங்கிய செல்லப்பாவிற்கும், யாழ்ப்பாண பொதுசன நூலகத்தை எரியூட்டப்பட்டதை அறிந்து உயிரிழந்த அருட்கலாநிதி தாவீது அடிகளாருக்கும் மலர் தூவி சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here