அமைச்சரவை மாற்றம் குறித்து அரசாங்கம் கருத்து

Date:

அமைச்சரவை மாற்றம் அல்லது பிரதமர் மாற்றம் தொடர்பிலான கலந்துரையாடல் எதுவும் இடம்பெறவில்லை என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை மறுசீரமைப்பு செய்து பிரதமர் பதவியை மாற்றி நளிந்த ஜயதிஸ்ஸ அல்லது பிமல் ரத்நாயக்கவுக்கு வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக வெளியான செய்தி தொடர்பாக இன்று (03) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை வலியுறுத்தினார்.

எதிரிகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக சில ஊடகங்களுடன் இணைந்து வெளியிடப்படும் தவறான செய்திகள் இவை என்று அமைச்சர் கூறினார்.

எந்த வகையான அமைச்சரவை மறுசீரமைப்பு குறித்தும் எந்த விவாதமும் நடத்தப்படவில்லை என்று அமைச்சர் வலியுறுத்தினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஜனாதிபதி அனுரவுக்கு நன்றி தெரிவித்தார் மோடி!

கொழும்பு கங்காராமய விகாரையில் புனித தேவ்னிமோரி (Devnimori) அவசரங்களின் (Relics) திருக்காட்சியை...

டில்வின் சில்வா உள்ளிட்ட குழு இந்தியா விஜயம்

“இந்திய கலாசார உறவுக் குழுவின்” (ICCR) அழைப்பிற்கு இணங்க மக்கள் விடுதலை...

மார்ச் 25 வரை உத்தரவு ஒத்திவைப்பு

2015 ஜனாதிபதி தேர்தல் காலத்தில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசியல்...

ஆன்மீக தலைவர்களை அவமதிக்கும் அமைச்சர்களின் கருத்துகளுக்கு கார்டினல் கண்டனம்

தற்போதைய அரசின் சில அமைச்சர்கள் ஆன்மீக தலைவர்களை அவமதிக்கும் வகையில் கருத்து...