சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவன் நீரில் மூழ்கி பலி

0
65

இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர் ஒருவர் உறவினர்கள் குழுவுடன் கும்புக்கன் ஓயாவில் நீராடச் சென்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஒக்கம்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

மாளிகாவில விகாரைக்கு அருகில் வசிக்கும் மொனராகலை றோயல் கல்லூரியில் 11ஆம் ஆண்டில் கல்வி கற்கும் ஆர். எம். சிராந்த தில்ஷன் என்ற மாணவர் இவ்வாறு தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் கும்புக்கன் ஓயா, மினிபுரகம பெரலியமன்கட பிரதேசத்தில் குளிப்பதற்குச் சென்றிருந்த நிலையில், அங்கு இந்த அசம்பாவித சம்பவத்தை எதிர்கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here