நதாஷா எதிரிசூரியவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

Date:

நகைச்சுவை நடிகை நதாஷா எதிரிசூரிய மற்றும் ‘SL VLOG’ யூடியூப் சேனலின் உரிமையாளர் புருனோ திவாகர ஆகியோரை எதிர்வரும் ஜூன் 21 வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை நடிகை நதாஷாவின் சமீபத்திய சர்ச்சைக்குரிய கருத்துகள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள குற்றப் புலனாய்வுத்துறை கடந்த மே 31 ஆம் திகதி அவரை கைதுசெய்தது. SL VLOG’ உரிமையாளரை அன்றையதினம் குற்றப் புலனாய்வுத்துறை கைதுசெய்தது.

நதாஷா எதிரிசூரிய கடந்த மே 28 அன்று கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) நாட்டை விட்டு வெளியேற முயன்றபோதே CID யினர் அவரை கைது செய்தனர்.

கொழும்பில் உள்ள ஒரு முன்னணி பாடசாலை ஒன்றில் சமீபத்தில் நடைபெற்ற ஸ்டாண்ட்-அப் காமெடி நிகழ்ச்சியில், பல மதங்களை அவமதித்ததாக அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

புதிய அமைச்சர்!

எரிசக்தி அமைச்சராக கலாநிதி அருண கருணாதிலக்க ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க...

நிலக்கரி மோசடி பொய்! எதிர்கட்சிக்கு தோல்வி

தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் கீழ் எந்தவிதமான நிலக்கரி மோசடியும்...

JVPயின் முழுநேர தொண்டர்கள் ராஜிதவிடம் புலம்பல்

தற்போதைய அரசாங்கத்தின் முன்னணி அமைச்சர்கள் குறித்து முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன...

‘அண்டை நாட்டுக்கு முதலிடம்’ – இந்திய துணை ஜனாதிபதி உறுதி

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டுக்கு வருகை தந்துள்ள இந்திய...