மைத்திரி வழங்கிய பொது மன்னிப்பை இரத்து செய்து நீதிமன்றம் தீர்ப்பு

Date:

ரோயல் பார்க்கில் இவோன் ஜொன்சன் எனும் யுவதியை கொலை செய்தமைக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜூட் சமந்த ஜயமஹவிற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய பொதுமன்னிப்பு அரசியலமைப்பிற்கு முரணானது என உயர் நீதிமன்றம் இன்று (06) தீர்ப்பளித்துள்ளது.

குறித்த வழக்கின் தீர்ப்பு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்றை பரிசீலித்த உயர் நீதிமன்றம் இந்த தீர்ப்பை அறிவித்துள்ளது.

2005ஆம் ஆண்டு ரோயல் பார்க் சொகுசு தொடர்மாடி குடியிருப்பில் இவோன் ஜொன்சன் எனும் 19 வயது யுவதியை கொலை செய்தமை தொடர்பில் குற்றவாளியாக காணப்பட்ட ஜூட் சமந்த ஜயமஹவிற்கு 2012ஆம் ஆண்டு மரணதண்டனை விதிக்கப்பட்டது.

எனினும், 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சங்கீத்சன் பிணையில் விடுதலை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சொல்லிசை பாடகர்...

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் 4 மாவட்டங்களுக்கு முதற்கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (12) முற்பகல்...

அரசாங்கம் நீதிமன்ற நியமனங்களை தாமதப்படுத்துவதாக குற்றச்சாட்டு

உச்ச நீதிமன்றத்தில் தற்போது 4 நீதிபதி பதவிகள் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில்...

நாம் ராஜபக்சகளை போன்று சுனாமி திருடர்கள் அல்ல – பிமல் ரத்நாயக்க

எந்த அரசாங்கத்திலும் சில விடயங்கள் நடைமுறையில் இருந்து கொண்டிருந்தாலும், அவை அனைத்தும்...