ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டணி பணிகள் துரிதம்

Date:

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணி அம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஜூன் 8 ஆம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு அம்பாந்தோட்டை நகர மையத்தில் நடைபெறவுள்ள மக்கள் கூட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீரவின் ஏற்பாட்டில் இந்த மக்கள் கூட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய கூட்டணியின் ஆரம்பத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து புதிய கூட்டணி வேலைத்திட்டம் வலுப்பெற்றுள்ளதாகவும், எதிர்காலத்தில் ஏனைய கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் அமைப்புகளை இணைத்து பாரிய விரிவான கூட்டணியொன்று உருவாக்கப்படும் எனவும் நிமல் லான்சா குறிப்பிடுகின்றார்.

நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன, துமிந்த திஸாநாயக்க, சுசில் பிரேம்ஜயந்த, நளின் பெர்னாண்டோ, அனுர பிரியதர்ஷன யாப்பா, நிமல் லான்சா, பிரியங்கர ஜயரத்ன, உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் கட்சி பிரதிநிதிகள் மற்றும் சிவில் ஆர்வலர்கள் இதில் பங்கேற்க உள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

போர்டோவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் உள்ளிட்ட ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி...

லஞ்சம் பெற்ற பொலிசார் கைது

அம்பாறை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்கள்...

நிதியமைச்சின் செயலாளராக பிரதி நிதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும?

நிதியமைச்சின் செயலாளராக பிரதி நிதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவை நியமிக்க...

28 அரசியல் பிரபலங்களின் சொத்துக்கள் குறித்து விசாரணை!

குற்றப் புலனாய்வுத் துறையின் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு, முந்தைய அரசாங்கத்தின்...