இனப்பிரச்சினையைத் தீர்த்து தமிழர்கள் சுயகொளரவத்துடன் வாழ பாரத பிரதமர் வழிசெய்ய வேண்டும்

0
152

இந்தியாவின் அயல்நாடான இலங்கையில் தமிழ்பேசும் மக்களின் நீண்டகால பிரச்சினையாக இருக்கும் இனப்பிரச்சினையை தீர்த்துவைத்து சுயகொளரவத்துடன் வாழ பாரத பிரதமர் வழிசெய்யவேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்ற உப தலைவர் கலாநிதி ஆறுதிரு முருகன் பாரத பிரதமருக்கான வாழ்த்துரையில் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

பாரத தேசத்தின் பிரதமராக மூன்றாவது தடவையாக மக்களால் தெரிவுசெய்யப்பட்டுள்ள இச் சந்தர்ப்பத்தில் தங்களை வாழ்த்துவதில் ஆனந்தம் அடைகின்றேன். தாங்கள் ஆற்றுகின்ற உன்னதமான சேவைக்கு மக்கள் தந்த பரிசாகக் கருதுங்கள் இதேவேளை இந்தியாவின் அயல் நாடாகிய இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் நீண்டகால பிரச்சினையாக இருக்கின்ற இனப்பிரச்சினையே தீர்த்து வைத்து சுய கௌரவத்தோடு தமிழினம் வாழ தாங்கள் வழிசெய்யவேண்டும்.

பல லட்சம் மக்களின் உயிரை இழந்த நிலையில் செல்லெண்ணா துயருடன் வாழும் தமிழர்களின் அவலத்தை நிரந்தரமாகப் போக்குவதற்கு தாங்கள் வழி செய்யவேண்டும்.

பாரத தேசத்தை உலக அரங்கில் உயர் நிலைக்குக் கொண்டு வரும் பாரியைப் பொறுப்பு உங்களுக்குரியது அதற்கு ஆணை தந்த மக்களின் கருத்துக்கு மதிப்பளித்து அனைத்து மக்களையும் சமமாக நேசித்து தங்கள் பணி தொடர அகில இலங்கை இந்து மாமன்றத்தின் சார்பில் யாழ்ப்பாணத்திலிருந்து வாழ்த்துகின்றேன் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here