Monday, June 24, 2024

Latest Posts

கம்பன் விழாவில் சிறப்பு விருது பெறும் இதொகா தலைவர் செந்தில் தொண்டமான்

கொழும்புக் கம்பன் கழகத்தின் இவ்வாண்டுக் கம்பன்விழா எதிர்வரும் ஜுன் மாதம் 14, 15, 16, 17 ஆம்  திகதிகளில் கொழும்பு வெள்ளவத்தை ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இலங்கையில் கம்பன் கழகத்தின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இவ்வாண்டுடன் 44 வருடங்கள் பூர்த்தியாகின்றன.

அகில இலங்கைக் கம்பன் கழகம் உலகளாவித் தமிழ்ப்பணி செய்த சான்றோர் ஒருவருக்கு ‘கம்பன் புகழ் விருதினை’  ஆண்டுதோறும் கொழும்புக்கம்பன் விழாவில்;  வழங்கி வருகிறது. ‘வி. ரி. வி. பவுண்டேஷன்’ நிறுவியுள்ள வி.ரி.வி. தெய்வநாயகம்பிள்ளை நினைவு அறக்கட்டளை வழங்கும் இக் ‘கம்பன்புகழ் விருது’இ இவ்வாண்டு, புகழ்பெற்ற எழுத்தாளர் சிவசங்கரி அவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

மேலும் சிறந்த செயற்பாடுகளால் நம் நாட்டுக்குப் பெருமை சேர்த்த பெருமக்கள் அறுவரை ஆண்டுதோறும் அகில இலங்கைக் கம்பன் கழகம் கௌரவித்து வருகிறது.

அவ்வரிசையில் இவ்வாண்டு கௌரவத்துக்குரியவர்களாக, இலங்கையின் முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய  ரவூப் ஹக்கீம், கிழக்கு மாகாண ஆளுநர்  செந்தில் தொண்டமான், எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சண்முகம் ஸ்ரீதரன், தமிழ் அறிஞர் கலாநிதி திருமதி மனோன்மணி சண்முகதாஸ், வடமாகாண பிரதம செயலாளர் இலட்சுமணன் இளங்கோவன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். தத்தம் துறைசார்ந்து இப்பெரியோர்கள் நம் தேசத்திற்கும் இனத்திற்கும் தன்னலமற்று செய்த பெருந்தொண்டுக்காகவும் அவர்தம் துறைசார்ந்த ஆற்றலுக்காகவும் வழங்கப்படும் இவ்விருதுகள் ஈழத்தமிழ் மக்களால் பெரிதும் போற்றப்படுகின்றன.

இவ்விருதுக்கு உரியவர்களுக்கான கௌரவங்கள் விழாவின் இறுதி நாளில் சகல மரியாதைகளுடனும் வழங்கப்படவுள்ளன.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.