வேட்பு மனுக்களை இரத்துச் செய்வது தொடர்பில் அவதானம்

0
124

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக கோரப்பட்டுள்ள வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கான பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்பிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்ட பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஆலோசனைக் குழுவில் இவ்விடயம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்ச்சியாக பிற்போடப்பட்டு வருகின்ற நிலையில், அது நடைபெறுவதற்கான அறிகுறியே காணப்படாத நிலையில், வேட்புமனுக்களை இரத்து செய்து தேர்தலை அறிவித்து மீண்டும் வேட்புமனுக்களை கூட்டுவதே சிறந்தது என இதில் கலந்து கொண்ட கட்சி மற்றும் எதிர்க்கட்சி அமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தேர்தலுக்கு கோரப்பட்டுள்ள வேட்புமனுக்களை ரத்து செய்வதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் கொண்டுவரவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here