ஊழியர் சேமலாப நிதியத்தில் ரூ.3,912.3 பில்லியன் இருப்பு

0
144

2024 பெப்ரவரி மாதம் நிறைவடையும் போது ஊழியர் சேமலாப நிதியத்தில் 3,912 .3 பில்லியன் ரூபா இருப்பு காணப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

இலங்கை மத்திய வங்கியின் ஊழியர் சேமலாப நிதி திணைக்களத்தின் மூலம் அந்த நிதியத்தின் 1958/ 15 ஆம் இலக்க சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு உட்பட்ட அலுவல்களுக்கு மட்டும் அதனை பயன்படுத்துவதற்கும் வேறு வேலைத் திட்டங்களுக்கு அந்த நிதி பயன்படுத்தப்பட மாட்டாது என்றும் அவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி மயந்த திசாநாயக்க எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அதே வேளை, ஊழியர் சேமலாப நிதிக்கு பங்களிப்பு செய்வோர், ஊழியர் சேமலாப நிதி மற்றும் அதற்கான தனியார் துறை ஊழியர்களின் எண்ணிக்கை தொடர்பில் தனித்தனியாக உடனடியாக விபரங்களை தெரிவிக்க முடியாதுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here