மட்டு மாநகர மேயராக தமிழ் அரசுக் கட்சி சிவம் தெரிவு

0
378

மட்டு மாநகர சபை மேயர் தெரிவு கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அஸ்மி தலைமையில் மாநகர சபை சபா மண்டபத்தில் இன்று 11.06.2015 காலை 09.40 மணிக்கு இடம்பெற்றது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த சிவம் பாக்கியநாதனை அதே கட்சியை சேர்ந்த மாசிலாமணி சண்முகலிங்கம் முன்மொழிய ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த நவரெத்தினராசா ரகுநாதன் வழிமொழிய வேறு தெரிவுகள் இன்மையால் அவர் ஏகமனதாக மட்டு மாநகரசபை முதல்வராக தெரிவு செய்யப்பட்டார்.

பிரதி முதல்வராக வைரமுத்து தினேஸ்குமார் போட்டிக்கு மத்தியில் மொத்த 34 வாக்குகளில் 18 வாக்குகளை பெற்று தெரிவு செய்யப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here