சஜித் ஜனாதிபதி , ரணில் பிரதமர் – இருவரையும் இணைக்க SJB முயற்சி

0
149

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோரை இணைக்கும் யோசனை சமகி ஜனபலவேகவின் செயற்குழுவில் முன்மொழியப்பட்டுள்ளதாக சமகி ஜனபலவேகவின் பௌத்த மத அலுவல்கள் தலைவர் கலாநிதி தனவர்தன் குருகே குறிப்பிட்டுள்ளார்.

இந்த யோசனைக்கு கட்சியின் சில உறுப்பினர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், தானும் சமகி ஜனபலவேகவின் செயற்குழு உறுப்பினராக உள்ளதாகவும் அவர் கூறினார்.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவாகவும் பிரதமர் வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுக்கே வழங்கப்பட வேண்டுமெனவும் தனவர்தன குருகே சுட்டிக்காட்டியுள்ளார்.

இணைய சேனலில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here