இந்தியாவின் பிஜேபி பிரபல மத்திய அமைச்சர்களை சந்தித்த செந்தில் தொண்டமான்

Date:

இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சுகாதார, இரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சர் மற்றும் பா.ஜ.கவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் விஜயவாடாவில் சந்தித்து, இந்திய தேர்தல்களின் சமீபத்திய வெற்றி மற்றும் அவர்களின் மும்முறை தொடர்ச்சியாக ஆட்சிக்கு வாழ்த்துக்களை தெரிவித்த்தார்.

மேலும் இலங்கைக்கு அவர்கள் தொடர்ந்து அளித்து வரும் உதவிகளுக்கு நன்றி தெரிவித்ததோடு, இலங்கைக்கு விஜயம் செய்ய அழைப்பு விடுத்தார்.

பொருளாதார அபிவிருத்தி தொடர்பான இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்தும் கலந்துரையாடல் மேற்கொண்டார்.

விஜயவாடா நகரில், இலங்கையில் பெருந்தோட்ட சமூகத்தின் 200 வது ஆண்டு நினைவு முத்திரையையும் அவர்களுக்கு வழங்கி வைத்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

என்னை கைது செய்ய வேண்டாம்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், பயங்கரவாதத் தடுப்புச்...

கொலை வழக்குகளில் சிக்கும் பிள்ளையான்!

கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் T-56 ரக துப்பாக்கிகளால் சுட்டு ஐந்து...

2026 முதல் காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் 5.1% வளர்ச்சி

2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி...

அடுத்த மூன்று ஆண்டுகளில் 13,600 புதிய தாதியர்கள் நியமனம்

இலங்கையின் தாதியர் சேவைக்காக அடுத்த மூன்று ஆண்டுகளில் 13,600 புதிய தாதியர்...