அரசாங்கத்தின் உள் பிளவை உறுதிப்படுத்தும் வகையில் சனத் நிஷாந்த பகிரங்க கருத்து

0
145

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார மற்றும் பலருக்கு வாய் வார்த்தை அதிகரித்துள்ளதாகவும் அது நீண்ட காலம் நீடிக்காது எனவும் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

“இந்த வீதியில் செல்லும் போதைக்கு அடிமையானவர்கள் மற்றும் அயோக்கியர்களுக்கு பயந்து நாங்கள் ஒளிந்து கொள்ளவில்லை. ஒளிந்து கொள்வது எமது எதிர்பார்ப்பு அல்ல. அதனால்தான் அந்த ரங்கே பண்டாரக்களைப் பார்க்கும் போது… அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் எமது வாக்கு மூலம் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் அவர்களின் வாய்கள் அதிகரித்துள்ளன. அது நீடிக்காது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற வகையில், எமது மாவட்டத் தலைவர்கள் –  மக்கள் ஆணையைப் பெற கடுமையாக உழைத்த அமைச்சர்கள் ஓரங்கட்டப்பட்டால் நாம் இனி அவ்வாறான அரசாங்கத்தில் இருக்க விரும்பவில்லை என்பதை நாம் தெளிவாகக் கூற வேண்டும்” என்றார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் வீதியில் நடமாடும் வாய்ப்பு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கிடைத்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்து தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே சனத் நிஷாந்த மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதிக்கும் பொஹொட்டுவாவிற்கும் இடையில் முரண்பாடுகள் இருப்பது இரகசியமல்ல. அதன் ஒரு அம்சமே இது என இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த கூறுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here