கிழக்கு அபிவிருத்தி தொடர்பில் விதுர மற்றும் பவித்ரா அமைச்சர்களை சந்தித்த ஆளுநர்

0
90

கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய முக்கிய சில அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் அமைச்சர்களான பவித்ரா வன்னியாராச்சி மற்றும் விதுர விக்ரமநாயக்க ஆகியோரை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்தித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தின் தொல்பொருள் இடங்களை மையப்படுத்தி சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கவும் பல்லின கலாசார நிகழ்வுகளை நடத்துவது குறித்தும் கலாசார அமைச்சின் விதுர விக்ரமநாயக்கவுடன் கிழக்கு ஆளுநர் கலந்துரையாடினார்.

இதேவேளை வனஜீவராசிகள் மற்றும் வனத்துறை அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியை சந்தித்த ஆளுநர் செந்தில் தொண்டமான், திருகோணமலையில் சுகாதார அமைச்சினால், அனைத்து வசதிகளுடன் கூடிய விசேட வைத்தியசாலையை அமைப்பதற்கு காணி அனுமதிப்பத்திரத்திற்கான NOC அனுமதி தாமதம் ஏற்படுவதால் அதை விரைவுபடுத்துமாறு கோரிக்கை விடுத்தார்.

மேலும் மீன்வள வளர்ப்புத் திட்டங்களுக்கு 2 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையிலுள்ள NOC அனுமதியை வழங்குமாறும் கோரிக்கை விடுத்தார். இலங்கை நாட்டின் சட்டப்படி இந்த திட்டங்களுக்கு வனம் மற்றும் வனவிலங்கு அனுமதி அவசியம். அனுமதிக்கு வழமையாக வழங்கப்படும் காலத்தை விட அதிக காலத்தாமதம் ஏற்படுவதால், அனுமதியை விரைவுப்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆளுநர் செந்தில் தொண்டமானின் கோரிக்கையை ஏற்ற அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி முன்னுரிமை அடிப்படையில் அனுமதியை விரைவு படுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here