சட்ட மா அதிபர் பதவி நீடிப்பு குறித்து இன்று இறுதி முடிவு

0
68

சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் சேவையை நீடிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரையை அரசியலமைப்பு பேரவை இன்று (18) மீண்டும் பரிசீலிக்கவுள்ளது.

சஞ்சய் ராஜரத்தினம் தனது 60 வயதை பூர்த்தி செய்யும் போது ஜூன் 27 முதல் ஓய்வு பெற உள்ளார். மேலும் அவருக்கு டிசம்பர் 31, 2024 வரை சேவை நீட்டிப்பு வழங்க ஜனாதிபதி பரிந்துரைத்துள்ளார்.

அரசியலமைப்பு பேரவை இந்த பரிந்துரையை இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் பரிசீலித்த போதிலும் இறுதி முடிவை எட்ட முடியவில்லை.

இதன்படி, அரசியலமைப்பு பேரவை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று பிற்பகல் 02.00 மணிக்கு கூடி பிரேரணையை மீள்பரிசீலனை செய்யவுள்ளது.

இதற்கு முன்னர் இந்த நாட்டின் வரலாற்றில் எந்தவொரு சட்டமா அதிபருக்கும் சேவை நீடிப்பு வழங்கப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here