பெறுமதியான அரச காணி விற்பனைக்கு!

0
134

பேலியகொட மீன் சந்தையை அண்டிய பகுதியில் அமைந்துள்ள 17 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட உயர் நகரப் பெறுமதியான காணியை விற்பனை செய்து, ஊழியர்களின் சம்பளம், நிலுவைத் தொகை மற்றும் நிலுவைத் தொகையை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரச பொறியியல் கூட்டுத்தாபனம் மற்றும் அதனுடன் இணைந்த தேசிய இயந்திர அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி ரத்னசிறி களுபஹன குறிப்பிட்டுள்ளார்.

இதன் பெறுமதி சுமார் 10 பில்லியன் ரூபா எனவும் இது தொடர்பான அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“இந்தக் காணியின் தற்போதைய பெறுமதி 9 – 10 பில்லியன் ரூபா என அரசாங்க மதிப்பீட்டு திணைக்களத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த காணி கொழும்பு நகரப் பகுதியில் மிகவும் பெறுமதியான காணியாகும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடிக் கட்டிடமும் இங்கு உள்ளது. ஆனால் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது இதன் நிர்மாணப் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டு தற்போது பாழடைந்துள்ளது. கட்டிடம் முழுமையாக கட்டப்பட்டால், இந்த நிலத்தின் மதிப்பு இன்னும் அதிகரிக்கும்.

இதற்காக நாம் சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அங்கீகாரம் வழங்கிய போதிலும், அதனை நடைமுறைப்படுத்த முடியாது என காணி அமைச்சின் தற்போதைய செயலாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலை எமக்கு பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. இதற்காக அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் தலையீட்டின் பின்னர் விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் குறித்த நிறுவனம் நிதியமைச்சிடம் கையளிக்கப்பட்டது.

இது எதிர்கால வேலைகளுக்கு மிகவும் வசதியாக இருக்கும்.” என சட்டத்தரணி களுபஹன மேலும் தெரிவித்தார்.

இந்த பிரச்சினையை பேசி தீர்வு காண்பதற்காக பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க மற்றும் நிதி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவிற்கு இடையில் இன்று (19) கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here