பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை குறைக்க முடிவு

0
131

450 கிராம் பாண் மற்றும் பிற பேக்கரி பொருட்களின் விலையை 10 ரூபாவால் குறைக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் (ACBOA) தெரிவித்துள்ளது.

இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு செய்யப்மடுகிறது.

முட்டையை 35 ரூபாவுக்கு வழங்க ஒப்புக்கொண்டதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சங்கம் தெரிவித்துள்ளது.

பேக்கரி உற்பத்திக்கு வெண்ணெய், நல்லெண்ணெய், ஈஸ்ட் மற்றும் கோதுமை மாவு ஆகியவற்றின் சில்லறை விலை குறைக்கப்படவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

நாட்டில் உள்ள 90 சதவீத பேக்கரிகள் 450 கிராம் எடையுள்ள பாணை ரூ. 150 மற்றும் ரூ. 160 விலைக்கு விற்பனை செய்கின்றன.

எனவே, அனைத்து பேக்கரி பொருட்களின் விற்பனை விலையை ரூ.5 ஆல் குறைக்குமாறு பேக்கரி உரிமையாளர்களிடம் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here