கொஸ்கொட சுஜியின் நெருங்கிய சகா சுட்டுக்கொலை

Date:

காலி, கொஸ்கொட, ஹிதர்வ பிரதேசத்தில் இன்று (21) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொஸ்கொட சுஜீ என்ற பாதாள உலக தலைவருக்கு நெருக்கமான விஜித் என்ற ‘கொஸ்கொட ரன்’ 52 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இன்று காலை இவர் தனது வீட்டில் இருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரு பாதாள உலக குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலே துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், கொஸ்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஹோமாகம பிரதேசத்திலும் நேற்றிரவு ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இலங்கை நிலக்கரி நிறுவன அலுவலகத்திற்கு பூட்டு

2009 ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட நிலக்கரி இறக்குமதிகள் குறித்து ஜனாதிபதி...

அதிகார மோகத்தில் NPP தரப்பு கலவரம்!

மாத்தறை கூட்டுறவு வைத்தியசாலையின் நிர்வாக அதிகாரத்தை முறையான தேர்தல் இன்றி கைப்பற்ற...

BYD ATTO 1 தொடர்பிலும் சிக்கல்

ஜான் கீல்ஸ் CG ஆட்டோ (பிரைவேட்) லிமிடெட் நிறுவனம் BYD ATTO...

மஹிந்தவின் சொத்து விபரம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தமது சொத்துகள் மற்றும் கடன்கள் தொடர்பான...