சந்தர்ப்பவாத தீர்மானங்களை நிராகரித்து தேச நலனுக்கு முன்னுரிமை கொடுக்கும் காலத்தில் நாம் அனைவரும் உள்ளோம் -சஜித்

0
56

சந்தர்ப்பவாத தீர்மானங்களை நிராகரித்து தேச நலனுக்கு முன்னுரிமை கொடுக்கும் காலத்தில் நாம் அனைவரும் உள்ளோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பலவீனமான தலைமைத்துவத்தின் கீழ் இந்நாட்டில் இன்று சட்டம், அநீதி என்பன தலைவிரித்தாடுவதாகவும் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

பணவீக்கம் தாறுமாறாக உயர்ந்துள்ளதாகவும், வேலை வரிசை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், பொருளாதார வளர்ச்சிக்கு பதிலாக பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சமகி சட்டத்தரணிகள் சங்கத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று (20) BMICH இல் இடம்பெற்றது. சமகி சட்டத்தரணிகள் சங்கமானது ஜனாதிபதி சட்டத்தரணி மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணிகள் உட்பட பல அனுபவமிக்க சட்டத்தரணிகளை உள்ளடக்கியதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here