நாட்டைக் கட்டியெழுப்பவோ அல்லது நாட்டை வீழ்ச்சியடையச் செய்யாதிருக்கவோ திட்டமிடாத அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட முடியாத காரணத்தால் நாடாளுமன்றத்தைப் புறக்கணிக்கத் தீர்மானிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (21) காலை நாடாளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
வரிசைகளில் மக்கள் படும் இன்னல்கள், பால் பவுடரின்றி தவிக்கும் தாய்மார்கள், பிள்ளைகளின் அவலத்தை புரிந்து கொள்ளாமல், திருடவும் சுரண்டவும் கை ஓங்கும் நாடாளுமன்றம் வெறும் கதைக் கடை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.
அதன்படி, இந்த வாரம் நாடாளுமன்றத்தை புறக்கணிப்பதாக அவர் அறிவித்தார்.